எளிமையான கிச்சன் டிப்ஸ்

 எளிமையான கிச்சன் டிப்ஸ

   🌷இட்லி  மிளகாய்ப்  பொடி  செய்யும்  போது ஒரு  தேக்கரண்டி  கொத்தமல்லி  விதையை வறுத்துச்  சேர்த்தால்  வாசனை  கூடும்.
நிலக்கடலை  அல்லது  எள்ளையும், கொப்பரைத்  துருவலையும் வறுத்துச்  சேர்த்துப்  பொடி  செய்தால்  சுவையாக இருக்கும்.. 


  🌷மஞ்சள்  கிழங்கில்  சீக்கிரம்  வண்டு வரும்.. காய்ந்த  துளசி  இலை  அல்லது  கல் உப்பு  போட்டு வைத்தால்  வண்டு  வராமல் இருக்கும்.. 

   🌷தேங்காயை சிறு  சிறு  துண்டுகளாக  நறுக்கி  தயிரில்  போட்டு  வைத்தால், ஒரு  வாரம் ஆனாலும்  தயிர் புளிக்காது.. 

   🌷முருங்கை க்கீரையை சமைக்கும் போது சிறிது  சர்க்கரையை  சேர்த்தால், கீரை  ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.. 

   🌷சாதம்  வேகும் போது  ஒரு  சிட்டிகை  உப்பும், 1 தேக்கரண்டி நெய்யும், 1தேக்கரண்டி எலுமிச்சை  சாறும்  சேர்த்தால்  சாதம் அதிக வெண்மையாகவும், ருசியாகவும்  இருக்கும். 

   🌷அதிரசம்  செய்யும்போது, 1கிலோ அரிசிக்கு  1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பை வறுத்து சேர்த்து  அரைத்து  வழக்கமான  பாணியில்  சுட்டு  எடுத்தால்  அதிரசம்  பஞ்சு  போல   இருக்கும்.. 



Post a Comment

Previous Post Next Post