முருங்கை கீரை முட்டை பொரியல் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
முருங்கை இலை - 1 கட்டு
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்- 15-20
காய்ந்த மிளகாய் - 2-3
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
முட்டை - 2-3
செய்முறை:
🌹முருங்கை இலையை உருவி எடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்..
🌹வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சின்ன வெங்காயம் (நறுக்கியது), கறிவேப்பிலை, மிளகாய் போட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும்..
🌹நறுக்கிய முருங்கை கீரையை போட்டு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
🌹கீரை முழுகும் வரை தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்.. வெந்து தண்ணீர் அனைத்தும் சுண்டிய பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்..
சுவையான முட்டை முருங்கை கீரை பொரியல் தயார்
முருங்கையின் பயன்கள்:
உடல் வலிமை பெறும்..
இரத்த சோகையை தடுக்கும்..
கண் தொடர்பான நோய்கள் சரியாகும்...
உடல் அழகு பெறும்..
இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து உள்ளது..
தோல் வியாதி சரியாகும்..
வயிற்றுப் புண் சரியாகும்..
தாய்பால் பெருகும்..
எலும்புகள் வலுப் பெறும்..
உடல் வெப்பத்தை குறைக்கும்.. மலச்சிக்கலயை தடுக்கும்....
சுவாசக் கோளாறு சரி செய்யும். ....