உருளைக்கிழங்கு பிரெட் உருண்டை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - 1 கப்
பிரெட் - 5-6
கொத்தமல்லி இலை - 1/2 கப்
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 லிட்டர்
சோள மாவு - 1-2மேஜைக்கரண்டி
செய்முறை:
🌹உருளைக்கிழங்கை அலசி இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு வேக விட வேண்டும்.
🌹பிரெட்டை தோசை கல்லில் போட்டு நிறம் மாறாமல் டோஸ்ட் செய்யவும்.
🌹அதனை மிக்ஸியில் போட்டு பவுடர் செய்யவும்.
🌹பெரிய வெங்காயம், கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
🌹வெந்த உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.
🌹அதனுடன் பெரிய வெங்காயம், கொத்தமல்லி இலை, கரம் மசாலா, மிளகாய் தூள், மிளகு, உப்பு, பிரெட் தூள் (1/2 கப்) சேர்த்து பிசைந்து கொள்ளவும்.. மீதம் உள்ள பிரெட் தூளை தனியாக வைக்கவும்..
🌹பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக உருட்டவும். சோள மாவை தண்ணீர் விட்டு கரைக்கவும்.
🌹வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டையை சோள மாவு தண்ணீருக்குள் போட்டு எடுத்து பின்பு பிரெட் தூளில் பிரட்டி எண்ணெய்க்குள் போட்டு பொன்னிறமாக எடுக்கவும்.
சூடான சுவையான உருளைக்கிழங்கு பிரெட் உருண்டை தயார்