தேங்காய் சாதம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - 1கப்
சாதம் - 2கப்
தேங்காய் எண்ணெய்
(அ)
கடலை எண்ணெய் - 2தேக்கரண்டி
கடுகு - 1/2தேக்கரண்டி
கடலை பருப்பு - 1தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 15-20
கா. மிளகாய் - 3-4
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலை - சிறிது
செய்முறை:
🌹வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, வெங்காயம்,மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்..
🌹அதனுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும்..
🌹உதிரியாக இருக்கும் சாதத்தை தேங்காய் துருவலுடன் சேர்த்து கிளற வேண்டும்..
🌹கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்..
உருளைக்கிழங்கு வருவலுடன் தேங்காய் சாதம் அட்டகாசமாக இருக்கும்..
சுவையான தேங்காய் சாதம் தயார்
பயன்கள்;
1. உடல் சூட்டை தனித்து, உடல் குளிச்சியாக வைக்கிறது..
2.வயிற்று புண் ஆற தேங்காய் பால் மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது..
3.கெட்ட கொழுப்பை கரைக்கக் கூடியது...
4.பற்கள் மற்றும் எலும்பு வலிமை பெறும்..
5.இளமை தோற்றம் பெற..
ஏராளமான பயன்கள் உள்ளன .. தேங்காயை சமைக்காமல் அப்படியே பச்சையாக பயன்படுத்தும் போது சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்..