முட்டை குழம்பு(கிரேவி) செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்;
முட்டை - 3
கடலை எண்ணெய் - 1 1/2 தேக்கரண்டி
பெ. வெங்காயம் - 2
ப. மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
தக்காளி - 2
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பூண்டு - 8-10 பல்
இஞ்சி - சிறிது
பட்டை - 2
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிது
செய்முறை:
🌹வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போடவும்..
🌹பின்பு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்..
🌹அதன் பின் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா போட்டு நன்கு வதக்கவும்..
🌹வதங்கிய பிறகு தேங்காய் துருவலை தண்ணீர் சேர்த்து அரைத்து ஊற்ற வேண்டும்..
🌹கிரேவி நன்கு கொதித்து வரும்போது முட்டையை உடைத்து ஊற்றி அடுப்பை சிம்மில் 10நிமிடம் வைத்து இறக்கவும்..
🌹சிறிது கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்..
சுவையான முட்டை கிரேவி தயார்
முட்டையின் பயன்கள்:
வைட்டமின் டி மஞ்சள் கருவில் உள்ளது..
பற்களும், எலும்புகளும் பலம் பெறும்.
கண்கள் ஆரோக்கியம் பெறும்..
எடையை பராமிக்கும்...