அரைத்த துவரம்பருப்பு சாம்பார் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 1/2 கப்
விளக்கெண்ணெய் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - சின்ன எலுமிச்சை அளவு
தாளிக்க:
கடலை எண்ணெய் - 1தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
கடுகு - 1/2தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 1/4 கி
கறிவேப்பிலை - சிறிது
அரைக்க:
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2தேக்கரண்டி
வெந்தயம் - 1/4தேக்கரண்டி
கொத்தமல்லி - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2தேக்கரண்டி
தேங்காய் - 10துண்டு
சின்ன வெங்காயம் - 7-8
காய்ந்த மிளகாய் - 6
செய்முறை:
🌹துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி அடுப்பில் வைக்கவும்.
🌹பருப்பு வேகும் போது விளக்கெண்ணெயையும் , மஞ்சள் தூளையும் போட்டு வேக விடவும்.
🌹புளியை தண்ணீரில் அலசி ஊற விடவும்..
🌹வாணெலியில் கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கொத்தமல்லி, சீரகம், மிளகு ,காய்ந்த மிளகாய் போட்டு எண்ணெய் இல்லாமல் வறுத்துக் கொள்ளவும்..
🌹வறுத்த அனைத்தையும் ஆற வைத்து அதனுடன் தேங்காய், சின்ன வெங்காயம் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்..
🌹பருப்பு நன்றாக வெந்தவுடன் அதை கடைய வேண்டும்..
🌹வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தூள்,கடுகு போட்டு வெடித்ததும் சின்ன வெங்காயம்(அறியாமல் முழுமையாக போடவும்) , கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்..
🌹அதனுடன் பருப்பு கடையல்+புளி தண்ணீர்+அரைத்த மசாலா+உப்பு சேர்த்து
கொதிக்க விடவும்..
🌹கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்..
குறிப்பு:
முருங்கைக்காய் இருப்பின் தாளிப்பதற்கு சின்ன வெங்காயத்தை குறைத்துக் கொண்டு அதனை பயன்படுத்தலாம்..
வெண்பொங்கலுடன் அரைத்த பருப்பு கிரேவி
Best combination..
துவரப்பருப்பின் பயன்கள்:
1.புரத சத்தும்
, நார் சத்தும் நிறைந்துள்ளது..
2. வைட்டமின் சி உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..
3. மலச்சிக்கல் பிரச்னையை தடுக்கும்.. ..
Tags:
துவரம்பருப்பு சாம்பார்