சுவையான பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

 சுவையான பன்னீர் கிரேவி செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்:
பன்னீர்                             -    100கி
கரம் மசாலா                   -    1/2 தேக்கரண்டி
உப்பு                                  -    தேவைக்கேற்ப
கஸ்தூரிமேத்தி              -    சிறிது
சர்க்கரை                          -     சிறிது (pinch) 

அரைக்க
கடலை எண்ணெய்        -      1 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை                -      1
பட்டை                                 -      1
கிராம்பு                               -     2
பெரிய வெங்காயம்        -     1
தக்காளி                              -     2
பூண்டு                                 -      2
இஞ்சி                                    -      சிறிது
காய்ந்த மிளகாய்              -      1
முந்திரி                                  -       4

தாளிக்க
சோம்பு                                   -      1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்         -       1

செய்முறை:

🌷100 கிராம் பன்னீரை சிறு சிறு துண்களாக நறுக்கி சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வைக்கவும். 

🌷ஒரு வாணெலியில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, நறுக்கிய வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கவும்.. 

🌷அதனுடன் தக்காளி, பூண்டு, இஞ்சி, முந்திரி போட்டு வதக்கி ஆற விட்டு அரைக்கவும்.. 
🌷வாணெலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, 
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன் நிறமாக வதக்கவும்.. 

🌷அதனுடன் அரைத்து வைத்துள்ள கலவை, கரம் மசாலா,உப்பு போட்டு நன்கு வதக்கவும்.. 

🌷வதங்கிய பின் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.. 

🌷கொதி வரும் போது தண்ணீருக்குள் இருக்கும் பன்னீரை எடுத்து கிரேவிக்குள் போடவும்.. 
🌷சிறிது காய்ந்த வெந்தயக் கீரையை (கஸ்தூரி மேத்தி) கையில் வைத்து  கிரேவிக்குள் தேய்த்து விடவும். இல்லையெனில்  கொத்தமல்லி இலையை தூவிக் கொள்ளலாம். 

🌷கிரேவிக்குள் வெள்ளை சர்க்கரை (சீனி) 
போட்டு இறக்கவும்.. 

சுவையான பன்னீர் கிரேவி தயார்

சப்பாத்திக்கு ஏற்ற சுவையான கிரேவி

Post a Comment

Previous Post Next Post