மொறு மொறு பூந்தி செய்வது எப்படி❓
தேவையான பொருட்கள்:
புழுங்கல் ஆரிசி - 500கி
கடலை மாவு - 500கி
காய்ந்த மிளகாய் - 15
உப்பு - தேவைக்கேற்ப
பொட்டுக்கடலை - 100கி
நிலக்கடலை - 150கி
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
பூண்டு - 1 கட்டை
கடலை எண்ணெய்
அ
ஆயில் - 1லி
செய்முறை:
🌹அரிசியை தண்ணீரில் அலசி 1மணி நேரம் ஊற வைக்கவும்..
🌹முதலில் மிளகாயை போட்டு நன்கு அரைக்கவும் பின்னர் அதனுடன் அரிசியையும் உப்பையும் சேர்த்து அரைக்கவும்.
🌹அரைத்த பின்னர் அதனுடன் கடலை மாவு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
🌹வாணெலியில் கடலை எண்ணெய் (அ) ஆயில் ஊற்றி காய்ந்ததும் பூந்தி தேய்க்கும் கரண்டியில் மாவை ஊற்றி தேய்க்கவும்.
🌹நுரை அடங்கும் வரை எண்ணெயில் விட்டு எடுக்கவும்..
🌹பூந்தி பொறித்த பின்னர் அந்த எண்ணெயில் நிலக்கடலை போட்டு எடுக்கவும்.. அதன்பின்னர் பொட்டுக்கடலை, கறிவேப்பிலை ,தோலுடன் தட்டிய பூண்டு போட்டு பொறித்தெடுக்கவும்.
🌹பூந்தி, நிலக்கடலை, பொட்டுக்கடலை, கறிவேப்பிலை ,பூண்டு இவ்வணைத்தையும் ஒன்றாகக் கலக்கி மூடி இருக்கும் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
"சுவையான மொறுமொறு பூந்தி தயார்"
Tags:
பூந்தி