பட்டாணி புலாவ் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
பட்டாணி - 1 கப்
அரிசி - 1கப்
கடலை எண்ணெய் - 1 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் - 2-3
முந்திரி - 5-6
பிரிஞ்சி இலை - 1-2
சோம்பு - 1 தேக்கரண்டி
பெ. வெங்காயம் - 2
தேங்காய் பால் - 2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
புதினா - 15-20 இலைகள்
கொத்தமல்லி இலை - சிறிது
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிது
செய்முறை:
🌷அரிசியை தண்ணீர் ஊற்றி அலசி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்..
🌷குக்கரில் எண்ணெய் 1 தேக்கரண்டி, நெய் 2 தேக்கரண்டி ஊற்றி பிரிஞ்சி இலை, ஏலக்காய், முந்திரி, சோம்பு, பெரிய வெங்காயம் (நீள வாக்கில் ), ப. மிளகாய்-1 போட்டு வதக்கவும்..
🌷மிக்ஸியில் ப. மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு அரைக்கவும்..
🌷குக்கரில் அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும்..
🌷ப. பட்டாணி, உப்பு , புதினா , கொத்தமல்லி இலை ஆகியவற்றைப் சேர்த்து வதக்கவும்..
🌷பட்டாணி வெந்தவுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்..
(1கப் அரிசிக்கு - 2 கப் தேங்காய் பால்)
🌷குக்கரில் அரிசியை போட்டு மூடி விஸ்சில் விட்டு இறக்கவும்..
சுவையான பட்டாணி புலாவ் தயார்
குறிப்பு:
ப. பட்டாணி காயாக இருந்தால் நேரடியாக சமையலில் பயன்படுத்தலாம்...
காய்ந்த பட்டாணியாக இருந்தால் முதல் நாள் இரவு ஊற வைத்து அடுத்து நாள் பயன்படுத்தவும்..
பயன்கள்:
புரோட்டீன், வைட்டமின் கே நிறைந்துள்ளது..
எலும்பு வலிமை பெறும்..
நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தை தரக் கூடியது... ..
Tags:
பட்டாணி புலாவ்