புளி சாதம் செய்வது எப்படி?

 புளி சாதம் செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்:
புளி                                      -   200கி
நல்லெண்ணெய்         -   1 மேஜைக்கரண்டி
கடுகு                                  -    1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு              -    1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு            -    1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்       -     சிறிது
காய்ந்த மிளகாய்          -    4
பூண்டு                                -    10-15 பல்
கறிவேப்பிலை               -    சிறிது
உப்பு                                     -    தேவைக்கேற்ப
மஞ்சள் தூள்                    -    1/2 தேக்கரண்டி
சாம்பார் பொடி                -     1 தேக்கரண்டி
நிலக்கடலை                    -     100 கி
புளி குழம்பு பொடி         -     1தேக்கரண்டி
அரிசி                                   -      2 கப்

செய்முறை
🌷அரிசியை அலசிக் 1/2 மணி நேரம் ஊற விடவும். 

🌷குக்கரில் 1 கப் அரிசிக்கு 2கப் விதம்,மொத்தம் 4 கப் தண்ணீர் ஊற்றி விசில் விடவும். 

🌷புளியை தண்ணீரில் அலசி ஊற வைக்கவும். 

🌷வாணெலியில் நிலக்கடலையை வறுத்து குக்கரில்  இருக்கும் சாததிற்குள் போடவும். 

🌷வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், பூண்டு ,காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.. 

🌷வதங்கிய பின் புளியை கரைத்து வடித்து ஊற்றி உப்பு, மஞ்சள் தூள்,புளி குழம்பு பொடி, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும். . 

🌷கொதிக்கும் போது புளியின் மணம் நன்கு வரும்போது அடுப்பை அனைத்து சாதத்தில் ஊற்றி கிளறவும்... 

சுவையான புளி சாதம் தயார்


Post a Comment

Previous Post Next Post