ராகி(கேழ்வரகு ) ரொட்டி செய்வது எப்படி?

ராகி(கேழ்வரகு ) ரொட்டி செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்:
ராகி மாவு                          -   1கப்
பெரிய வெங்காயம்     -    3
ப. மிளகாய்                       -    3
கறிவேப்பிலை               -    சிறிது
கொத்தமல்லி இலை   -    சிறிது
உப்பு                                      -    தேவைக்கேற்ப
கடலை எண்ணெய்       -    1 தேக்கரண்டி
  
செய்முறை:

🌹பெரிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகிய அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.. 

🌹ஒரு பாத்திரத்தில் ராகி மாவை போட்டு அதனுடன் பெரிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

🌹அந்த மாவை ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து உருண்டை பிடித்துக் கொள்ளவும்..

🌹வாழை இலையை(சிறிது) எடுத்து, அதில் சிறிது எண்ணெய் தடவி ஒரு உருண்டை எடுத்து மெலிதாக தட்டிக் கொள்ளவும்.. .  

🌹அடுப்பில் தோசை கல் வைத்து சூடேற்றி,  இலையுடன் தட்டி வைத்திருக்கும் மாவை போடவும்.. 
🌹1நிமிடம் கழித்து மெதுவாக இலையை தோசை கல்லில் இருந்து எடுக்கவும்.

🌹ரொட்டியின் மேல் சிறிது எண்ணெயை விடவும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக விடவும்.. 

🌹அடுப்பை மிதமான தீயில் வைத்துக்  ரொட்டி செய்யவும்.

இலையுடன் வேகும் ரொட்டியின் சுவை அட்டகாசம்.. 

சுவையான ராகி ரொட்டி தயார்

ராகியின்  பயன்கள்
🥀 எடையை குறைக்க உதவும்... 
🥀சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து.. 
.🥀ரத்தச் சோகையை தடுக்கும்
எலும்புகள் வலுப்பெறும்... 

Post a Comment

Previous Post Next Post