சுவையான புதினா சாதம் செய்வது எப்படி?

 புதினா சாதம் செய்வது எப்படி❓

தேவையான பொருட்கள்:

சாதம்                                -    1கப்
கடலை எண்ணெய்   -   1மேஜைக்கரண்டி
கடுகு                                 -   1/2தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு          -    1 தேக்கரண்டி
முந்திரி                             -    3
உப்பு                                   -    தேவைக்கேற்ப

அரைக்க:
புதினா  இலை             -      1 கை பிடி
ப. மிளகாய்                    -       2
பூண்டு                              -      2
இஞ்சி                               -      சிறு துண்டு


செய்முறை:

🌹புதினா, ப. மிளகாய், பூண்டு, இஞ்சி அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.. தேவைப்பட்டால் சிறிது  தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். 

🌹வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு, முந்திரி (2 ஆக உடைத்து) போடவும். 

🌹முந்திரி  light ஆ நிறம் மாறும் போது அரைத்த புதினா விழுதை சேர்க்கவும்.. 

🌹உப்பு சேர்த்து நன்றாக தண்ணீர் சுண்டும் வரை (dry ஆக )வதக்க வேண்டும். 

🌹அதனுடன் சாதத்தை கொட்டிக் கிளர வேண்டும்.. 

இப்போது சுவையான புதினா சாதம் தயார்.. 

புதினாவின் பயன்கள்:

ஆஸ்துமா நோய்க்கு சிறந்தது.. 
பசியுணர்வை தூண்டக்கூடியது.. 
வயிற்றுப்போக்கு குணமாகும்.. 
சுவாச கோளாறுகள் நீங்கும்.. 
பற்கள், ஈறுகளின் நலனை காக்கும்.. .... 

  
   

Post a Comment

Previous Post Next Post