சாமை தக்காளி சாதம்🍅

தேவையான பொருட்கள்:
சாமை அரிசி - 1 கப்
எண்ணெய் - 2தேக்கரண்டி
கடுகு - 1/2தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/4தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 15-20
காய்ந்த மிளகாய் - 2 அ 3
கறிவேப்பிலை - சிறிது
தக்காளி - 1பெரியது
உப்பு - தேவை
மஞ்சள் தூள் - 1/4தேக்கரண்டி
புதினா - சிறிது
நெய் - 1தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிது
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 5 பல்
செய்முறை:
🌷1கப் சாமை அரிசியை தண்ணீர் ஊற்றி ஊற விட வேண்டும்(15-30 நிமிடம் ) .
🌷ஒரு வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு போடவும்.
🌷 நறுக்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்..
🌷இஞ்சி, பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி,உப்பு ,புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
🌷 பின்பு 1கப் சாமை அரிசிக்கு 3 -3 1/2
கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்..
🌷அரிசியை போட்டு வேக விடவும்..கொஞ்சம் நெய் ,கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்...
சுவையான சாமை தக்காளி சாதம் தயார்.
சாமை பயன்கள்:
1.உடல் வலிமை பெறும்.
2.இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.
3.மலச்சிக்கலை போக்கும்.............