"கோதுமை போண்டா "

கோதுமை போண்டா
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

தேவையான பொருட்கள்;

 கோதுமை மாவு           -       500கிராம்
சின்ன வெங்காயம்     -       200கி
கறிவேப்பிலை              -       4-5
கொத்தமல்லி இலை   -       சிறிது
பெருங்காயம்                 -      1 சிட்டிகை
சோடா உப்பு                    -       1சிட்டிகை
(  optional) 
அரைக்க:
காய்ந்த மிளகாய்           -        7-10
பூண்டு                                -        10  பல்
இஞ்சி                                 -        சிறு துண்டு
சீரகம்                                  -         1                        தேக்கரண்டி
கல் உப்பு                            -     தேவைக்கேற்ப
கறிவேப்பிலை                -       2 கொத்து
புழுங்கல் அரிசி               -      100கிராம்
பொரிப்பதற்கு:
 கடலை எண்ணெய்       -      1 லிட்டர்
செய்முறை.. 

🌷புழுங்கல் அரிசியை  ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற விடவும்.. 

🌷மிக்சி ஜாரில் மிளகாய், பூண்டு, இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை, கல் உப்பு, ஊற வைத்த அரிசி இவ்வணைத்தும் சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.. 

🌷ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த மசாலா, பெருங்காயம் ,சோடா உப்பு, 200கி சின்ன வெங்காயம் , கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை இவ்வணைத்தும் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.. 
🌷வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கோதுமை மாவு கலவையை சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுக்கவும்

🌷*சுவையான கோதுமை போண்டா தயார்*

Post a Comment

Previous Post Next Post