சுவையான சாம்பார் சாதம் மிக எளிமையான முறையில் செய்யலாம்.
சாம்பார் சாதம் என்பது தென்னிந்தியாவின் ஒரு பிரபலமான உணவு. இது அரிசி மற்றும் சாம்பாருடன் கலந்த ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவாகும். சாம்பார் சாதம் செய்வதற்கான எளிய முறையை இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
| அரிசி | 1 கப் |
| துவரம் பருப்பு | 1/2 கப் |
| மஞ்சள் தூள் | 1/2 ஸ்பூன் |
| சாம்பார் தூள் | 1 1/2- 2 ஸ்பூன் |
| முருங்கைக்காய் | சின்னது 1 |
| அவரைக்காய் | 2 |
| கத்திரிக்காய் | 1 |
| கேரட் | 1 |
| பீன்ஸ் | 2 |
| தக்காளி | பெரியது 1 |
| கொத்தமல்லி,கறிவேப்பிலை | சிறியது |
| கடலெண்ணை | 1 தேக்கரண்டி |
| பெருங்காயம் | சிறிது |
| கடுகு | 1/2 ஸ்பூன் |
| கடலைப்பருப்பு | 1 ஸ்பூன் |
| உளுத்தம் பருப்பு | 1 ஸ்பூன் |
| மிளகாய் | 2 |
| சி.வெங்காயம் | 10-15 |
| நெய் | 1-2 ஸ்பூன் |
| பூண்டு | 3-5 |
| உப்பு | தேவையானவை |
செய்முறை
சுவையான சாம்பார் சாதம் மிக எளிமையான முறையில் தயார் செய்யலாம்.
அரிசி 1கப், பருப்பு 1/2 கப் போட்டு ஒன்றாக கலந்து தண்ணீர் ஊற்றி நன்கு அலசி மீண்டும் தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற விட வேண்டும்.
முருங்கைக்காய்,அவரை,
கேரட்🥕,பீன்ஸ், கத்திரிக்காய்🍆
(தேவைப்பட்டால் வேறு ஏதேனும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்).இவை அனைத்தையும் தண்ணீரில் அலசி அரிந்து வைத்துக் கொள்ளவும்.அதனுடன் தக்காளி🍅 யையும் கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் அரிசியையும் பருப்பையும் போட்டு அதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி வைக்கவும். (ஒரு கப் அரிசிக்கு 2கப் தண்ணீர் என்ற விதத்தில் ஊற்றுவீர்கள் என்றால் அதனுடன் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து பருப்பு சாதத்திற்கு ஊற்ற வேண்டும்).
குக்கர் அரிசிக்குள் கட் பண்ணி வைத்துள்ள 5 காய்கறிகள், தக்காளி🍅, பூண்டு🧄, சின்ன வெங்காயம், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விட்டு டேஸ்ட் பார்க்கவும். காரம், உப்பு சரியாக இருக்க வேண்டும்.
குக்கர் மூடியை போட்டு அடுப்பில் எடுத்து வைத்து 4-5 விசில் விட்டு இறக்கவும்.
விசில் அடங்கியவுடன், அடுப்பில் வாணெலியை வைத்து எண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு பெருங்காயத்தூள் போட்டு பொரிந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு,தேவைபட்டால் முந்திரி சேர்த்து அதனுடன் மிளகாய் 1-2 , கறிவேப்பிலை போட்டு வதக்கி குக்கரில் உள்ள சாதத்தில் போட்டு கலந்து விட வேண்டும்.
நெய் தேவைக்கேற்ப ஊற்றி கலந்து விடலாம். கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்.
சூப்பரான 👌சுவையான சாம்பார் சாதம் தயார்.
சிறந்த கூட்டணிகள்
- வடகம்
- ஊறுகாய் (மாங்காய், லெமன், சுட்ட மிளகாய்)
- பொரியல் (கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு)
- தக்காளி ரைத்தா
சாம்பார் சாதத்தின் சிறப்புகள்
- சத்துக்கள் நிறைந்தது – புரதம், நார்சத்து, விட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளது.
- சுவையான மற்றும் பசிக்குத்தீர்க்கும் உணவு – எண்ணெய், மசாலா சமச்சீராக இருப்பதால் சிறந்த சுவையை தரும்.
- சுலபமாக ஜீரணமாகும் – ரசம் போலே சாம்பாரும் உடலுக்கு எளிதில் ஜீரணமாகும்.
- வேகமாக தயாரிக்கலாம் – மிக சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.
- எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் – பருப்பு, மசாலா பொருட்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கும்.
பயன்கள்:
1. புரதசத்து மற்றும் தாதுக்கள்
பருப்பு (துவரம்பருப்பு அல்லது முங்க பருப்பு) முக்கியமான புரதங்களை வழங்கும்.
இரும்புசத்து, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உடலுக்கு நல்லது.
2. நார்ச்சத்து அதிகம்
காய்கறிகள், துவரம்பருப்பு ஆகியவை நார்ச்சத்தும் வழங்கி ஜீரணத்தை மேம்படுத்துகிறது.
மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.
3. சுவையோடு சேர்ந்து ஆரோக்கியம்
சமையல் மசாலாக்களில் உள்ள மஞ்சள் தூள் உடல் பாதுகாப்பு சக்தியை அதிகரிக்கும்.
திராட்சை, முருங்கைக்காய் போன்றவை சிறந்த ஊட்டச்சத்துகளை வழங்கும்.
4. சிறந்த சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) கிடைக்கும்
முருங்கைக்காய் மற்றும் பருப்பு ஆகியவை எலும்புகளுக்குத் தேவையான கால்சியத்தை வழங்கும்.
5. இரத்தசோகையை குறைக்கும்
காய்கறிகள், மஞ்சள் தூள், துவரம்பருப்பு ஆகியவை இரத்தசோகையை குறைக்க உதவும்.
6. இருதய ஆரோக்கியம்
பருப்பில் உள்ள நல்ல கொழுப்பு மற்றும் நார்ச்சத்து இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும்.
7. உடல் எடை கட்டுப்பாடு
நார்ச்சத்து மற்றும் குறைவான கொழுப்பு இருப்பதால் உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு சிறந்த உணவு.
8. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
மஞ்சள் தூள், பூண்டு, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.